செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

கடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா?


கடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா?

பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் ஆக்கத்தில் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் கடல் திரைப்பட வெள்ளோட்ட வீடியோவில் கதாநாயகி, 15 வயதே ஆன துளசி, கதாநாயகனை உதட்டில் முத்தமிடுவது போல ஒரு காட்சி வருகிறது.

இவ்வளவு இளம் வயதில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும்வகையில் நடிக்க வைப்பது அறமா என ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். (அட என்னபா இது நாமதானா ? ஒரு  சிலராமே  சில்லறையாய் இருப்பவர்களோ ?)

எழுத்தாளர் ஞானி இது பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் திரைப்பட இயக்குநர்களுக்கு சமூகப்பொறுப்பு வேண்டுமென்கிறார்.(ஹ ஹ ஹா ....இதுதான் இந்த வருஷத்தோட பெஸ்ட் ஜோக்-ஆ  இருக்கும் சமூக பொறுப்பு வேண்டுமாம் யாரை பார்த்து அரசை  பார்த்து என்ன தைரியம் அதாங்க சினிமா வேற அரசியல் வேறயா இன்னைக்கி )  

பிரபல இயக்குநர் பாக்கியராஜ் நடக்காததை ஒன்றும் அப்படிப்பட்ட காட்சிகள் காட்டிவிடவில்லை, ஆனாலும் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்.(இவரு பாருங்க நாம ஸ்க்ரீனுக்கு வெளியேவே நகர் வலம் வந்து பாலியல் வல்லுரவைஎல்லாம்காட்ட வழி  வகுத்துவிட்டு திருவள்ளுவர்  இவரு மேல வந்தது  போல பேசறாரு )

பாலியல் தொடர்பான விஷயங்கள் கண்ணியமாகவே கையாளப்பட்டு வருவதாகக் கூறுகிறார் நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி.(யப்பா என்ன அடக்கம்பா இவரு! இந்தியாவின் கண்ணியத்திற்கும் காலசாரத்திற்கும் கண்ணிவெடி எப்பவோ வச்சிடங்க இவிங்க இவிங்கனா இவரு இல்ல மீடியா பொதுவாத்தான் தனியா சண்டைக்கு வராதீங்க)

வளரும் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன் கதாநாயகி துளசிக்கு 15 வயதா என்பதல்ல பிரச்சினை, மாறாக திரைப்படத்தில் வரும் அக்கதாபாத்திரத்தின் வயதைத் தான் நாம் கவனிக்க வேண்டும், எப்படியும் மணிரத்னம் போன்ற மிகச் சிறந்த இயக்குநர்கள் சமூகத்திற்குத் தவறாக வழிகாட்டமாட்டார்கள் என்றார்.(இவரு பாருங்க காமடி பண்னறாரு நமக்கு  தெரியாதா பெரியவங்கள் எல்லாம் ஸ்கூல் ட்ரெஸ் போட்டு நடிக்கும் போது சின்னபசங்க பெரியவங்களா நடிக்க கூடாதா? என்னஇது இரண்டு வயசு புள்ள இருபது வயசு சாப்பாடை சாப்பிட கூடாதா ? ஜீரணம் ஆகாதான்னு கேக்கறாரு )

மேலும் திரையுலகில் பெண்கள், சிறுமியர் அனைவருமே மிகப் பாதுகாப்பாக கௌரவமாக(உண்மை உண்மை தவிர வேறொன்றுமில்லை) நடத்தப்படுகின்றனர் என்கிறார் அவர்.

1 கருத்து: