திங்கள், 18 பிப்ரவரி, 2013

மசாலா பொடி- யின் அசத்தல்


ருசியாய் சாப்பிட ஆசைத் தான் சமைக்கத்தான் பயம் சமைக்க போனா ரொம்ப நேரம் ஆச்சுனா எப்படி பதிவு போடறதுனு ஓரு கவலை சிலருக்கு (ஹி ஹி..) சமைக்க போய் நேரமாச்சுனா டி.வி சீரியல் எப்படி பாக்றது ஒரு கவலை சமைக் கவே நேரம் பத்தலை இதில் விதவிதமாவா என்று வேலைக்கு  போகிறவர்கள் கேட்பவர்கள் ஒரு பக்கம்

அட இவங்க என்ன  பரவாஇல்லை நாங்க தான் பாவம் என்று சொல்லும் பேச்சுலர்கள் ஒரு பக்கம் இவிங்க எல்லோருக்கும் சேர்த்து ஈசியா இருக்கறமாதிரி ஒரு சமையல் ஐடியா கொடுத்தா சந்தோஷ படுவாங்க  இல்ல (க்கும் எதாவது எடகூடமாச்சி அப்பறம் இந்த பக்கமே  தலை வச்சி படுக்க முடியாத போயிடும்லே வேணா தப்பிச்சிகோ  இந்த விளையாட்டு வேணாம் )

அட சும்மா இரு மனசே நான் அசதி புடுவேன் இல்ல இப்புடு சூடு .................
நான் இப்ப மல்டி பர்பஸ் பொடி ஒன்னு சொல்லி கொடுக்க போகிறேன் கவனமா படிச்சி பார்த்த பிறகு தான் .........முயற்சி செய்யனும்  சரியா முக்கியமா பேச்சுலர்ஸ் படிச்சிட்டு குறிப்பு எடுத்துகிட்டு போயி  உங்க வீட்டி இருந்து செஞ்சி (தில் இருந்தால் நீங்களே  செய்து கொள்ளுங்கள்) கொடுக்க சொல்லி வாங்கி கிட்டு வந்திடுங்க அப்ப ஈசியா போயிடும்( ஒரு பொடி சொல்லி கொடுக்கறத்துக்கு ஏன்னா... பில்டப்பு )

சரி சரி விஷயத்திற்கு போகலாம் இந்த மல்டி பர்பஸ் பொடி மட்டும் உங்ககிட்ட கைவசம் எப்பவும் வைத்துகொள்ளுங்கள் அப்பத்தான்  குறைவான நேரத்திலேயே விதவிதமாக சமைத்து அசத்தலாம்
இப்ப நான் சொல்ற பொருளை  எல்லாம் கடையில் போய் முதலில் வாங்கிட்டு வந்து விடுங்கள் அது எதுனா
தனியா-1 கப் 
கடலை பருப்பு- 1 கப்  ,
உளுத்தம் பருப்பு -2கப் ,
காய்ந்த மிளகாய் வற்றல்- 25
பெருங்காயம் சிறிதளவு
தேங்காய் கொப்பரை துருவல்- 2 கப் (இது சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்)
இப்ப இந்த பொருட்கள் எல்லாவற்றையும் வானலி என்று சொல்லும் பாத்திரத்தை (அதாவது நாம வறுப்பதற்கு  உபயோகிக்கும் பாத்திரம்) அடுப்பில் வைத்து லேசா சூடானதும் ஒரு ஒரு பொருளாக வறுத்து கொள்ள வேண்டும் . வறுக்கும் போது கண்டிப்பாக இடிக்கியை உபயோகிங்கள் அப்பத்தான் பொருட்களை தட்டில் எடுத்து கொட்ட வசதியாக இருக்கும் இல்லைனா, 
ஐயோ!! கையை சுட்டுகிச்சேனு.... நாமலே திட்டிக கூடாது சி.....சி இந்த பழம் புளிக்கும் என்ற கதை போல் ஆகிவிடும். 
சரி இப்போ வறுத்தத்தை எல்லாம் கொஞ்சம் சூடு ஆறிய பின் மிக்சியில் போட்டு (மிக்சியை நல்ல சுத்தமாக ஒரு துணி கொண்டு துடைத்து விட்டு )  கொஞ்சம் கரகரப்ப்பாக அரைத்து கொள்ள வேண்டும் பிறகு  சுத்தமான ஒரு பாட்டிலில் போட்டு (பாட்டிலையும் துடைக்கவும் )வைத்து கொள்ளவும் இந்த பொடி ஒரு மாதம் வரை கெட்டு போகாது(ஈரமில்லாத ஸ்பூனை யூஸ் செய்யுங்க ) அதனால் தான் பேச்சுலர்ஸ் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு போகும்  போது    இதை அரைத்து கொண்டுவந்து விடுங்கள் 
சரி இப்ப நாம இதை எப்படியெல்லாம் யூஸ் செய்யலாம் என்று பார்ப்போம்

அவசரமாக நாலு காய்களை  இல்லை ஒன்று தான் முடியும் என்றால் ஒன்று கட் பண்ணி  போட்டு பருப்புகூட வேகவைத்து இந்த பொடியை 2 ஸ்பூன் போட்டு கொதிகவிட்டு தாளித்து கொட்டுங்க  திடீர்  பொறித்த குழம்பு ரெடி(நம்ம அம்மா சமைத்து போலவே இருக்கும் )

சும்மா ஒரு வாணலியை வைத்து பட்டை லவங்கம் தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி முடியும் என்றால் காயை போட்டுகோங்க இந்த பொடியை போட்டு வத்கி நீவிட்டு கொதிக்கவிட்டு சாப்ப்பாத்தி போன்றதற்கு தொட்டுகலாம்


இது போலவே ஏதாவதி கீரை பாத்(ஹெல்த்துக்கு நல்லது )  இல்லை பட்டாணி பாத் செய்யும் பொது அவசரத்திற்கு இந்த பொடியை வைத்து அசத்தலாம் இப்படி பல சமையலில் இந்த பொடியை யூஸ் செய்து உங்களை உங்கள் வேலையை அலுத்து கொள்ளாமல் சுலபமாக்கி கொள்ளுங்கள் 

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே ,ஒரு முறை செய்து அசத்தி வீட்டில் உள்ளவர்கள் முன் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாமே

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு