புதன், 26 ஜூலை, 2017

பயமாய் .இருக்கிறதே ...

கோவிலுக்கு சென்ற போது  ஒரு கிராஸ் டாகின் உபயம்
வரிசை கட்டி நிற்கிறதே
ஏற்றத்தாழ்வும் இல்லாமல்
நரகத்தின் சிகரத்தையும்
தொட்டு சாதனையாயிற்று
முதுமையின் முகாரி
சுற்றி சுற்றி
அறியாத வயதில்
பக்கத்து பென்சிலின் முனை உடைத்து
அதன் காரணமாய் தலையுடைத்தும்
எட்டாத  உயராது  ஜிலேபிடப்பாவில்
பிசுபிசுப்பு  கைகள் உணர்கிறதே இன்றும்
கணக்கில் திறமையில்லை 
எண்ணிக்கையின் விவரமில்லை
செய்க்கைகளுக்கோ பஞ்சமில்லை 
அறிந்த வயதில்
அஞ்சறை பெட்டியின் சில்லறைகளின்
மணத்தை நாசியில் இன்றும்
தோழமையுடன் நடத்திய துகிலுரிப்புகள்
வார்த்தைகளில்
சிரிக்கிறதே என்னை பார்த்து
படிப்பின் பொய்யுரைத்து
பத்திரமாய் சுற்றி திரிந்த
கால்களின் வலி இன்றும்
குத்துகிறதே நெஞ்சினில்
விக்கரமாதித்தியன் ஆனேனே 
விடலை பருவத்தின்
விதிமீறல்களோ விடையில்லை
பதுங்குகுழியில் ஒளிந்து கொண்ட தீவிரவாதியாய்
மனசாட்சி
பச்சோந்தியின் பஞ்சாங்கம் படி
வாழ்க்கையின் போக்கு
நாட்டுக்கு தீமையில்லை ......
வீட்டுக்கு??? தெரியவில்லை ???
இன்று
எத்தனையோ  செய்த கைகளும் கால்களும்
பசையின்றி விசை போன பின்பும்
நிமிர்வில்லா முதுகெலும்பும்
அகக்கண்ணே புறக்கண்ணாய் ஆனா போதும்  
சே தொல்லை என்று
தொலைவே கேட்டும்
புனர்வாழ்வு ஆசை வந்தும்
செய்யும் தவறுகளின் கர்மவினை
தொடரும் என்று திடமாய் நம்பும்
இந்த புண்ணிய பூமியில் பிறந்த பயன்
மடிந்துவிட பயமாய் இருக்கிறதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக