புதன், 23 ஜனவரி, 2013

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்புசெவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

7 கருத்துகள்:

 1. நல்ல தகவல் தொடர்ந்து அப்டேட் செய்யுங்கள்

  ​நாகு
  www.tngovernmentjobs.in

  பதிலளிநீக்கு
 2. செவ்வாயில் உயிர் இருந்தால் என்ன?
  இல்லாவிட்டால்தான் என்ன?
  இதுதான் ரொம்ப முக்கியம் இப்போது

  நாம் இருக்கும் புவியை நாசமாக்கி கொண்டிருக்கும்
  நச்சுகளை களைவதற்கு வழி தேடட்டும்

  இதேபோல் சென்றுகொண்டிருந்தால்
  எதிர்காலத்தில் வேறு கோளிலிருந்து வந்து
  நம் பூமியில் உயிர்கள் இருந்தமைக்கான
  சாத்திய கூறுகளை தேட நேரிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதைத்ததை அறுவடை செய்கிறோம் மரம் வைத்தவன் தண்ணி ஊதட்டும் என்று புதிது புதிதாய் விதைப்பதில் ஈடு பட்டுவிட்டோம்

   நீக்கு
  2. மரம் வைத்தவன்
   எங்கு தண்ணீர் ஊற்றுகிறான்?

   அந்த மரத்தை விறகாக்கி
   அடுப்பு மூட்டி சாராயம் காய்ச்சி விற்கிறான்

   காகங்கள்மரம் நடுவிழா
   ஓசையில்லாமல் அது உட்கார்ந்து
   எச்சமிடும் எல்லாம் விதைகளை
   விதைக்கிறது.

   ஒன்று கூட
   முளையாமல் போவதில்லை

   ஆனால் வெட்கம் கெட்ட
   இந்த ,மனிதர்கள் மரம் நடு விழாவிற்கு
   விளம்பதிர்க்காக பல் லட்சம் செலவு
   செய்து நட்ட மரங்கள்
   ஒன்று கூட பிழிப்பதில்லை.

   இந்த முண்டங்கள்
   மரம் நட வேண்டாம்

   இருக்கின்ற மரங்களை
   வெட்டி சாய்க்காமல் இருந்தாலே போதும்

   ஆனால் மனிதர்கள்
   தங்கள் சுயனலதிர்க்காக
   அனைத்தையும்மனிதர்களுக்கே
   வழங்கும் மரங்களை
   வெட்டி சாய்க்கின்றனர்.

   அழிப்பதற்கே பிறவியெடுத்த கூட்டம்
   மனித இனம் ஆக்க அல்ல
   முடிவில் அதுவும்
   பூண்டில்லாமல் அழிந்தொழியும்
   ஒரு நாள் உயிரில்லாத
   மற்ற கோள்களில் உள்ளதை போல.

   நீக்கு