திங்கள், 30 அக்டோபர், 2017

டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .

நடப்பது என்ன? -7 


அறியாத வயதில் டீன் ஏஜ்  நட்பு  எப்படி பட்டதாக  அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான   பிரச்னைகளை  கொண்டு வந்துவிடுகிறது என்பதனை   பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள்  பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன்  ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .



ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும்  எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து  கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும்  என்று நம்மால் கணிக்கவே முடியாது. 



டீன்  ஏஜ் என்பது ஒரு புது உலகம் புரியாத வயது அங்கு பார்க்க படுவதெல்லாம் அவர்களுக்கு பிரமிப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கும் வயது .படிப்பை வைத்து  புத்திசாலி என்று இனம்காணப்படும்  பிள்ளைகளிடமும்  திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம் இருக்கும்.  



நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட    என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.



பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி  எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில  பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில்  சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல்  மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு  என்று நன்றாக  விசாரித்த பின் தேவையானவற்றிற்கு  மட்டும் கொடுங்கள்.  



படிப்பில் கவனம் குறைந்தால் வயது என்று காரணம் சொல்லி தள்ளி போட்டு விடாதீர்கள்.... என்னவாக காரணம் இருக்கலாம் என்று துப்பறியுங்கள். கூடா நட்பு வந்துவிட்டால் பதட்டப்பட்டு திட்டி வேறு நிலைக்கு நீங்கள் போகாமல் நாசுக்காக அவர்களை உங்களின் பால் திருப்ப நடவெடிக்கை எடுங்கள். முக்கியமாய் செல்போன் ரகசியமாய் பேசப்படுகிறதா..... கணனி ரகசியமாய்  கையாளப்படுகிறதா .......என்பதை கூர்ந்து  கவனியுங்கள். நான் தான் வாங்கி வைத்துவிட்டேனே  என்று  சமாதானம் படுத்தி கொள்ளாதீர்கள் இந்த வயது நம்மை ஏமாற சொல்லும் வயது. 



பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு  செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை  பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு  நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு. 


முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு  எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை  கண்டிக்கும் போது தாய்  எதிரான பாசதையும்  தயவையும்  குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர்  காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.

 

எல்லாத்தயும் விட  காதல் என்ற இப்பெயரில் நடக்கும்  கூத்துக்களின்  விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள்  இல்லை இச்சை என்ற மாயைகுள்  சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி  தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.


 நம்  வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்ப்பதில்  டெடிகேஷனாக(அர்ப்பணிப்பு )இருக்க வேண்டும்.  எப்படி கடவுளிடம் இருக்கிறோமோ? அப்படி அவர் நம்மை அறிய வேண்டும் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று இருக்கிறோம் அல்லவா டெடிகேஷனோடு  அப்படி பிள்ளைகளின் மேலும்  இருக்க வேண்டும்.   அப்போதுதான் அவர்களின் உடல், உள்ளம் இரண்டு அலைவரிசையையும்  நம்மால் உணரமுடியும் . வழிகாட்ட  முடியும் தவறுகள் நேரும் முன் காக்கவும் முடியும் 



நாம் நாம்மட்டுமே  அவர்களை காக்கும் கரங்களாக  இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.நாமுடைய  டெடிகேஷன்  அவர்களுடைய உள் உணர்வு அறிய வேண்டும் அவர்கள்  செய்யும் எல்லாமும், எண்ணங்களும் உணரப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும்.  அப்போது அவர்களின் செயல்களில் ஒரு கட்டுக்கோப்பு வர வாய்ப்பு இருக்கிறது . .



இந்த தொடரில் நான் ஆண்  பிள்ளைகள் வளர்ப்பை பற்றி மட்டுமே அலசி உள்ளேன் அவர்கள் செய்யும் தவறுகளின் அதீதத்தை  தொடவில்லை ஏன் என்றால் அது முடிவற்றதாக  இருக்கும். இன்று செய்தி என்று ஒன்றை கேட்க படிக்க  போனால் நாம் பார்ப்பது எல்லாம் கதிகலங்க வைக்கும்  விஷயங்களே இன்னறய இளைய தலைமுறை எதை நோக்கி போகிறது? யார் காரணம்? நாமாக வேண்டாம்........ தவறுகளின் விகிதத்தை  குறைக்க நம்மால் ஆனா முயற்சிகளை  எடுப்போம். 


எனக்கு மனதில் தோன்றியதை இதுவரை பதித்து வருகிறேன் தவறுகள் இருப்பின் எனக்கு  புரிய வையுங்கள் நானும் இன்னமும் பிள்ளை வளர்ப்பை பற்றி கருத்துக்கள் கற்று கொள்ள உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் .  இதை தொடர்ந்து ஒரு சிறு கதையை  பதிக்கிறேன்  ஒரே டிரையா  போகுதே  கதை வழியாக சொல்லலாமென்று   அடுத்து வரும்  பதிவுகளில் அதற்க்கும்  பின்னர் பெண் பிள்ளைகளின் டீன் ஏஜ்ஜை பற்றி பார்க்கலாம்.

தொடரும் ....
 




25 கருத்துகள்:

  1. இப்பதிவிலேயே முக்கியமானது ஒப்பீடு... அதை மட்டும் செய்யவே கூடாது...

    சிந்தனைகள் தொடர வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சரியா இருக்கா சொல்வது வழி நடத்துங்கள்

      நீக்கு
  2. முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை கண்டிக்கும் போது தாய் எதிரான பாசதையும் தயவையும் குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர் காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.// மிக மிகச் சரியே! தொடர்கிறோம். முந்தைய பதிவுகளையும் வாசிக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில் இதான் நடக்குது. மாமா நான் பிள்ளைங்களை எது சொன்னாலும் கண்டுக்காம இருப்பார். இல்லன்னா என்னைதான் தப்பு சொல்வார். அதனால, இதுக நைசா கழண்டிடும், நாங்க சண்டை போட்டுப்போம்.

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி கீதா சிஸ்

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி ராஜி ஹா ஹா இது முக்காவாசி வீடுகளில் நடக்கும் ஆனால் அதில் அவர்களை குளிர் காயவிடாமல் பார்த்து கொள்ளணும் அவ்வளவுதான்

      நீக்கு
    4. இது எங்க வீட்டிலும் நடக்கும்

      நீக்கு
  3. நல்ல தொடர்...
    பதின்ம வயதில் சரியான பாதை அமைத்துக் கொடுப்பது நம் கடமை.
    ஆண் பிள்ளை என்றில்லை பெண் பிள்ளைக்கும் உலகம் புரிய வைக்க வேண்டும்.
    இன்று இணையம் நல்லதைவிட கெட்டதையே அதிகம் தருகிறது என்பதால் தனிமையும் இணையமும் சேர்ந்து மாற்றுப் பாதையில் பயணிக்க வைக்கும் என்பதை மறக்கக்கூடாது.

    அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பா கண்டிப்பாய் ....பிள்ளைகள் என்று வந்துவிட்டால் இன்று ஆண் பெண் என்று வித்யாசமில்லாமல்தான் இருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் பராமரிப்பு தேவை படுகிறது

      நீக்கு
  4. நல்ல பதிவு பூவிழி .ஒப்பீடு ,ஓவர் செல்லம் தரும் பெற்றோர் ..என அனைத்தையும் அழகாக விளக்கி இருக்கீங்க .தவறு செய்தாலும் பிள்ளைகளை சரியான நேரம் கவனித்து நம் பக்கம் திருப்பிடனும்.சுய பச்சாதாபத்தில் விழ விடக்கூடாது .தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அஞ்சு ஆமாம் அதில் கவனமுடன் இருக்கனும் தொடரலாம்

      நீக்கு
  5. நன்றாக செல்கிறது கட்டுரை.
    பயனுள்ள நல்ல பதிவு.
    தொடருங்கள், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சொல்லி இருப்பவை யாவுமே சரியான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
  7. தில்லை அகத்தார் குறிப்பிட்ட விடயமே நானும் சொல்ல நினைத்தேன்.

    முதலில் தாயும், தந்தையும் ஒருமித்த கருத்துக்கு வந்தே பிள்ளைகளை கண்டிக்க வேண்டும்.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜி நன்றி தொடரலாம்

      நீக்கு
    2. த. ம. 5
      நான் கணினிக்கு வந்துதான் ஓட்டு இட முடியும் தாமதத்திற்கு கோபம் வேண்டாம்.

      நீக்கு
    3. ஜி நான் ஏற்கனவே சொன்னது தான் இப்பவும் எல்லா பக்கமும் ஒரே மூணு முணுப்பா இருக்கே என்ன அது என்று அறியும் ஆர்வம்தானே தவிர ஓட்டு பற்றியெல்லாம் எதுவும் முக்கியமில்லை சிரமம் வேண்டாம் டீலில் விடுங்க எனக்கு தோழமைதான் தற்பொழுது முக்கியம் நாட்களின் இறுக்கத்திற்கு மேலும் அதை பற்றி இப்பவும் புரிந்து கொண்டேனா என்பது டவ்ட்டு தான்

      நீக்கு
  8. ///முதலில் தாயும், தந்தையும் ஒருமித்த கருத்துக்கு வந்தே பிள்ளைகளை கண்டிக்க வேண்டும்.///

    அப்ப பிள்ளைகளை கண்டிக்காவே வழி இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth ஒருமித்த கருத்து இல்லையென்றாலும் அதை அவர்கள் முன் வெளிப்படுத்த கூடாது

      நீக்கு
  9. dedication மிக சரியான வார்த்தை தேர்வு...

    மேலே வாசிக்கும் போது என் மனதிலும் அதே கருத்தே வந்தது...

    அப்பா..அம்மா வும் முதலில் ஒரு மித்த எண்ணத்தில் இருந்தால் பிள்ளைகளை வழிநடத்துவதும் எளிது...

    இல்லையேல்...மிக கடினம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு அப்படி இருக்கும் பட்ச்த்தில் பிரச்சனையென்று வந்தால் சுலபமாய் தீர்க்கவும் முடியும் இடைஞ்சல்கள் இல்லாமல்

      நீக்கு
  10. பயனுள்ள நல்ல பதிவு
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  11. ஹூம், அதிலும் தாத்தா, பாட்டி இருந்துவிட்டால் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் குழந்தைகளுக்கு அதீதச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விடுவார்கள். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்! :(

    பதிலளிநீக்கு