புதன், 19 டிசம்பர், 2012

என் வீட்டு தெருவில் ........

என் வீட்டு 
தெருவில் ........

என் அன்பு
காதலா!!


உன்னை கண்டவுடன் 
சிந்திக்க மறந்து 
சிக்கி கொண்டது 
என் சிரம் 

காற்று மட்டும் 
உள்வாங்கி 
காய்ந்து 
போனது 
என் தொண்டை ........

திருவிழாவில் 
தொலைந்து போன 
குழந்தை போல் ...............
திரு திருவென 
வழிகின்றன 
என் கண்கள் 

கசக்கி போடும் 
காகிதத்தை கூட
அறிந்திடும் காதுகள் 
காலுகடியில் 
இருக்கும் 
ஆட்டோபாம்மை கூட................
அறிய மறுகிறது 

வீசி நடந்த 
என் கைகள் ........
ஒன்றை ஒன்று 
காப்பாற்றி கொள்ள 
கோர்த்துகொண்டன .

திக்கு தெரியாத 
காட்டில்............. 
நடப்பது போல் 
என் கால்கள் 
பின்னி பின்னி 
நடகின்றன 

உன்னுடன் 
வாழாமல் 
போவேனோ.............
என............ 
பயபடுகிறேன் 
முச்சு விட 
மறகின்றன.................
என் 
மூக்கு

சீராய் 
துடித்த என் 
இதயமோ ................
சிவதாண்டவம் 
ஆடுகின்றன 

என் 
அவயங்கள் 
அவதியுறுகின்றன 
அனாசியமாய்
நீ ...........................
என் தெருவில் 
நடந்தபோது
என்னை 
கடந்தபோது ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக