புதன், 19 டிசம்பர், 2012

காதல் கிச்சி கிச்சி

காதல் வந்தால் ........................


காதலியுடன் 
நான் 
இருக்கும் போது
கடவுள் வந்து
வரம் கொடுத்தலும்
.உனக்கென வேண்டும்.................
என்பேன் ............
சிரித்து கொண்டே .

த்யேட்டரில் 
என் நண்பர்கள் 
மொத்து மொத்து .......
என்று மொத்தினார்கள் !
இரண்டு சீட் தள்ளி இருந்த 
என் காதலி 
என்னை முறைத்தால் !
ஏன் என்றேன் ?
நண்பன் .............
“நீ காதலி இறக்கும் போது
சிரித்தாயடா “
நான் எங்கே 
படம் பார்த்தேன் !!!!!!

என் அம்மா
என்னை பார்த்து 
அழுகிறாள் 
ஏன்??????
நான் தட்டில் 
உள்ள கறியை 
விட்டு 
மற்றவர்கள் போட்ட 
எலும்புகளை 
கடித்து கொண்டிருந்தேன் 
என்னை மறந்து !

என் தங்கை 
என்னை மரமண்டை..............
என்று குட்டிவிட்டு 
அவள் சைக்கிளை
தள்ளி கொண்டு போனாள்
சைக்கிளுக்கு காத்தடிக்காமல் 
பக்கத்து மரத்துக்கு 
காத்தடிகிறேன் !

என் அண்ணன் 
என்னுடன் 
படுக்க பயபடுகிறான் 
எங்கே 
நடு இரவில் 
நான் அவனை 
முத்தமிட்டுவிடுவேனோ!

காலை புலர்ந்தது ..
என்னை சுற்றி .................
என் வீட்டில்
உள்ளோர் கால்கள் ..............
பதறி எழுந்தேன் 
பாவமென பார்த்தார்கள் 
ஏன்?????/
நான் கட்டிலின் 
கீழே என்று !

என் அப்பா 
என்னை பர்ர்க்கும்போதேல்லாம் 
வீட்டை விட்டு 
தூரத்திடுவேன் 
என்று மிரட்டுகிறார் 
ஏன்???????
அவர் அழகாய் கட்டிய 
காம்பவுண்ட் சுவரில் 
என் காதாலியின் 
பெயர் எழுதிவிட்டேன் 
என்று .............கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக