திங்கள், 24 டிசம்பர், 2012

அவலம் அவலம் அவலம் யார் காரணம் ?


அவலம் அவலம் அவலம் யார் காரணம் ?


          காலம் காலமாக  பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள்/கொடூரம் இவை பற்றி நாம் புதிதாய் பார்கவில்லை என்று ஜடம்  ஆகிவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களா? புரியவில்லை
 இந்த தாய்(சொல்லி கொள்ளவோம் பெருமையாக ) திரு நாட்டில் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாலும் சுதந்திரம் வாங்கி பின்பும் பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் 
கொடூரங்களும் பார்த்து மக்கள் இது என்ன சாதாரணம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போல்
 தலை நகரில் நடந்ததால் தலையடுத்து ஆடுகிறதா? இல்லை இதுவும் ஒரு அரசியல் முன்னோட்டமோ? என்று புரியவில்லை முன்காலத்தில் போருக்கு போவதற்கு முன் னால் ஒரு உயிரை பலி கொடுப்பார்களாம்  அது போல் இன்று அரசியல் சதுரங்கத்தில் யார் யாரை ஜெய்ப்பதர்க்காக இந்த உயிர்கொடுரம் நடத்த பட்டுள்ளதோ ?

ஒன்று புரியவில்லை பெண் படித்து விட்டாள் என்பதாலேயே தன் பாதுகாப்பை பற்றி கவலை கொள்வதை விட்டு விடவேண்டுமா? இன்றை நிலை சமுகத்தில் நடக்கும் கொடூரங்கள், சீர்கேடுகள் பற்றிய அறிவுறத்தபடவில்லையா ? அவளுக்கு அறிவு இல்லையா?மெத்த படிக்கும் பெண்களே சமூக   
விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் படிக்காத பெண்களின் நிலை என்ன ?அவலம் அவலம் அவலம் எங்கு திரும்பினாலும் இருகரம் நீட்டி இழுகின்றன பெண்களை இதற்கு யார் காரணம்?

இதை எப்படி களைவது பெண் என்பவள் யார் ஒரு விளையாட்டு பொம்மையா பிடித்த ஆண்கள் வைத்து விளையாடட்டும் பிடிகாதவர்கள்  அதை பிச்சி எரியட்டும் என்பதுதானா பெண்களே பெண்கள் பாதுகாப்பை பார்த்துகொள்ள வேண்டுமா ,பெற்றோர்கள் அதை பற்றி கவலை கொள்ள வேண்டுமா சரி வெளி இடத்தில் தான் இப்படியா வீடு பூர்ந்து பெண்களை பலாத்தகாரம் செய்படுவதில்லையா ?அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஏன் இப்படி ?வித விதமாக நடந்து கொண்டுதான்  இருக்கிறது.முடிவற்ற நிலை ....................

ஆண் என்பவன் யார் ?அவனுக்குள் எப்பொழுதும் ஒரு கொடூரம் ஒலிந்து இருக்கிறதா ?அது எப்பொழுது தலை தூக்கும் என்று  பெண்கள் மேல் எப்பொழுது பாயும் என்று  எப்படி அறிந்து கொள்வது ?
 நம்பிகை அற்ற இந்த நிலை மனிதன் தோன்றிய காலம் தொட்டு ஆண்கள் மேல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றன் பாரதி தனி ஒரு மனிதனுக்கு உயிருக்கே பாதுகாப்பில்லை இன்று
சுயநலவாதிகளின் சூதாட்டத்தில் அடிமைகளாய் நாம்
மனிதர்கள் தானா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக