புதன், 19 டிசம்பர், 2012

காதல் கிச்சி கிச்சி

இது வரை ..................
என் உயிர் 
காதலி 
உன் 
ஒளி சிந்தும் முகத்தை 
ஓவியம் தீட்டவில்லை 

உன் 
புன்னகை முகத்தை 
புகைப்படம் எடுக்கவில்லை 

உன்னை
வாழ வைக்க 
மாளிகை கட்டவில்லை 

அட !
காதல் காய்ச்சலில் 
அனைவரும் 
உளரும்
கவிதையை கூட
புனையவில்லை 
என்ன செய்ய ???????????

உன்னை 
என்
முன்னே 
பார்த்தபடியிருந்தால் 
ஓவியம் தீட்டியிருப்பேன் 

உன்னை 
நினைவாயாக்க 
நினைத்திருந்தால் ...........
புகைப்படம் எடுத்திருப்பேன் 

உன்னை 
என்னிலிருந்து 
தூரமாய்
வைக்கவேண்டுமெனில் 
மாளிகை எழுப்பிருப்பேன் 

நீயோ 
என் 
நெஞ்சினில் 
உயிரினில் 
ஒலிந்து கொண்டாய்
ஓவியம் வரைய 
முடியாமல் 
உன் 
புன்னகையை 
பொக்கிஷமாகினேன் 
என் 
இதயவீட்டின் 
ராணியாகிவிட்ட 
பின்பு உனகெதற்க்கு 
மாளிகை !!
சரி போகட்டும் 
நானும் 
உளற முயற்ச்சிகிறேன் 
இனியாகிலும் ...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக