திங்கள், 17 டிசம்பர், 2012

நினைவு குறிப்புகள்
கொஞ்சி கொஞ்சி 
கதைகள் பேசிய ....
காலம் 

கொட்டும் மழையையும் 
ரசித்து ....
நனைந்த காலம் 

கொசு கடியும் 
மறந்து கோலமிட்ட ....
காலம் 
பொல்லாங்கு 
சொன்னவரையும் ...
பார்த்து 
சிரித்த காலம் ,

படிப்பில் ...
பல்லாங்குழியும் 
பரமபதமும் 
ஆடிய காலம் ,

அம்மாவின் 
ஆ க்டோபஸ் 
அறிவுரையை 
துறந்த காலம் 

பட்டு பாவாடை கட்டி 
பாதங்கள் அதிர 
குஞ்சலங்கள் துள்ள 
குதித்தோடிய காலம் 

அந் 
நினைவுகள் பல 
உண்டு 

ஓ ....................
வருமோ !
என் வாழ்வின் 
பொற்காலம் 
எப்போது வரும் ?
அடுத்த பிறவி !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக