வியாழன், 19 அக்டோபர், 2017

தேவதை என்னும் அரக்கன்

நடப்பது என்ன ?-4


தீபாவளி குறுக்கிட்டுவிட்டது நடுவே இதன் தொடர்ச்சியை மறந்திருந்தால் இங்கு பார்த்து கொள்ளவும் மூன்றாம் தொடர்ச்சில் https://poovizi.blogspot.in/2017/10/3.html

கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 

தேவத்தை என்னும் அரக்கன் யார் நம் இனிய செல்போன் இந்த அரக்கன்  இந்த இரண்டு நாளில் நம் கையைவிட்டு அகன்றிருக்க மாட்டான்  நாம் வாழ்த்துக்கள் பரிமாற சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள உதவியாய், உபத்திரவமாய் ......

இது பிள்ளைகளின் கையில்  எந்த வகையில் உபயோகிக்க பட்டது  என்று பார்க்க கூட  நேரமற்று  பிஸியாக இருந்திருப்போம் .சிறுக சிறுக செல்போன் என்ற அளவில் சிறிய தேவதை என்னும் அரக்கன் நம்மை ஆக்கிரமித்து கொண்டான் ஏன் இப்படி சொல்லிறேன் என்றால் அதனால் நன்மையையும்  உண்டு தீமையும் உண்டு.
நன்மை என்னவென்றால் இன்று காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் பணிக்காக செல்வதால் தன் பிள்ளைகளின் பற்றி அறிந்து கொள்ள  வாங்கி வைக்கிறார்கள்  வீட்டில் வாங்கி கொடுக்கிறார்கள் அவர்கள் பணியில் திரும்பி வருமுன் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்துவிடுவதால் விசாரிப்புக்காக இது உபயோக படுகிறது
அடுத்தது  அவர்கள் டியூஷன் அல்லது வேறு வகுப்புகளுக்கு பெறோர்கள் இல்லாமல் பயணிப்பதால் அவர்களின் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் அறிய
முக்கியமாய் இந்த இரண்டு காரணங்களுக்காக தான் செல்போன் என்பது 90%வீட்டில் வாங்கி கொடுக்க படுகிறது என்று நினைக்கிறேன்.
இதனால் பெறோர்கள் அவர்களை பற்றி நேரடியாக பேசி ஆசுவாச படுத்தி கொள்கிறார்கள் பணியில் இருந்து வருமுன் அவர்கள் இல்லாமல் பிள்ளைகள் பிற வகுப்புகளுக்கு செல்லும் போது .இப்படியாக உதவி தேவதையாக இருக்கும் செல்போன் எப்போது அரக்கனாய் உருவெடுக்கிறது என்றால்
அந்த பொருளில் உள்ள வசதிகளை நாம் அறிமுக படுத்துவது  நம் செயல்களினால் நம்மையும் அறியாமல்
முதலில் அதில் கேம்ஸ் என்னும் தளத்தில் விளையாட ஆரம்பிக்கிறார்கள் அதிலேயே தன் படிப்பின் நேரத்தை இந்த அரக்கன் பிடித்து கொள்வதை அறியாமல் அடுத்து  தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது நடக்கிறது மேலும் பல தகவல்கள் பரிமாற்றம்  நடைபெற்று அதை கையாள்வதில் நம்மை விட அவர்கள் விரைவில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.


இந்த அரக்கன் கையில் அமர்ந்தவுடன் அவர்கள்  பார்வை நாக்கு எல்லாம் முடங்கிவிடுகிறது வீட்டினுள் உறவினுள். மேலும் அதில் உள்ள வசதிகளை அனுபவிக்க உண்டான வழிமுறைகளை அடைய பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள்.


இங்கு தான் பெற்றோர்கள் விழித்து கொள்ள வேண்டும்.  இந்த வயதில் இணையம் என்பதை உபயோகிக்க ஆரம்பித்தால் அது ஆபத்தை விளைவிக்கும் அவர்களின் வாழ்க்கை பாதையில்  தீமை என்னும் காற்று  வீசிவிட வாய்ப்புள்ளது அவர்கள் வயதுக்கு மீறிய வலைத்தளங்களை பார்வையிட விரும்புகிறார்கள் மற்ற எல்லா பிள்ளைகளும் வைத்திதிருப்பதாக சொல்லி அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் தன் படிப்புக்கு அது உதவும் என்றெல்லாம் சொல்லி   நாம் அதற்கு அடிபணிந்து போய்விடுகிறோம் பெரும்பாலும்.


மேலும் நிறைய பெற்றோர்கள் என் பிள்ளைக்கு எவ்வ்ளவு விஷயம் தெரிகிறது எனக்கே சொல்லி கொடுக்கிறான் என்று மயங்கிவிடுகிறார்கள், பெருமை பேசுகிறார்கள். முக்கியமாய் அடுத்த ஜெனெரேஷனில்  அவர்களுக்கு இருக்கும் இந்த மாதிரியான நவீன பொருள்களை கையாளும் கிரகித்து கொள்ளும் தன்மை நம்மை வியக்க வைக்கிறது. சில நேரங்களில் நாமே நமக்காக அவர்களிடம் உதவியை நாடுகிறோம் இந்த விஷயத்தில் அது அவர்களை நம்மை மீறி போக வழியையம் கர்வத்தையும் கொடுக்கிறது என்றே நினைக்கிறேன்.

 
இந்த செல்போன் என்ற தேவதை அரக்கனை பற்றி சொல்ல ஆரம்பித்தால்  இன்று இருக்கும் சூழ்நிலையில்  முடிவுஅற்றதாகவே இருப்பது போல் தோன்றுகிறது  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் .................கருத்துக்கள் சொல்ல வாருங்கள்
தொடரரும்...................
21 கருத்துகள்:

  1. மிகத்தெளிவான அறிவுப்பூர்வமான அலசல். இன்றைய குழந்தைகள் 90% பெற்றோர் சொல் கேட்பதில்லை கண்டிப்பாக அடம் பிடித்து காரியம் சாதிக்கின்றனர்.

    நம்மாலும் மறுக்க இயலவில்லை காரணம் நமக்கு இருப்பதோ ஒரே குழந்தை.

    ஆசிரியருக்கும் பயமில்லை அவர்களிடமும் சொல்ல முடியாது ஏற்கனவே குழந்தை முன்னிலையில் சொல்லி விட்டோம். "குழந்தையை தொட்டே கையை ஒடிச்சுருவேன்" என்று வேறு வழி ?
    அனுபவிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜீ நான் ஆசிரியர் பணியில் இருந்ததால் என்னால் பெற்றோர்களின் புலம்பலையும் அறிய முடிந்திருக்கிறது ஹா ஹா அதிகபட்ச கண்டிப்பாய் குட காட்டிட முடியாது இதனால் என்னவொரு சங்கடமென்றால் எதற்கெடுத்தாலும் பெற்றோர்களிடம் பேச வேண்டிய நிர்பந்தம் வேலைக்கு செல்லும் பெற்றோரென்றால் அவர்களுக்கும் சங்கடம்

      நீக்கு
  2. நன்மை அதிகமென்றாலும் தீமைகளும் சில இருக்கின்றன. அலைபேசி உபயோகிக்கும் குழந்தைகளை கண்காணிப்பில் வைப்பது நல்லது. தலைப்பில் சொல்லி இருப்பது அல்லது சொல்ல நிலைத்திருப்பது தேவதையா? தேவத்தையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா நேற்று போஸ்ட் கொடுத்துட்டு இன்று தான் பார்க்கிறேன் தேவதை தான் த் நடுவில் விழுந்ததை கவனிக்காமல் கொடுத்தது இருக்கிறேன் தவறு தான் நன்றி அறிவு உறுத்தியதற்கு என்னுடைய கீபோர்ட் திடீரென்று மக்கர் செய்து வருகிறது மாற்ற வேண்டும் காலம் கடத்து கிறேன்

      நீக்கு
  3. எதையுமே சரியாகப் பயன்படுத்தத் தெரிந்துவிட்டால் எதுவுமே பயனுள்ளதுதான். கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள் அதுவும் அப்படித்தானே...அது போலத்தான் செல்ஃபோன் பழக்கமும்.பெரியவ்ர் முதல் குழந்தைகள் வரை..பெரியவர்கள் அதைச் சரியான தருணத்தில் வாங்கிக் கொடுத்து அதைப் பயன்படுத்தும் விதத்தையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டால் நலல்து. என் குழந்தைகள் மூவரும் மிகவும் கவனமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போது பெரியவனுக்கு மட்டுமே ஸ்மார்ட் ஃபோன். மற்ற மகனுக்கும், மகளுக்கும் தனி ஃபோன் இல்லை. அதற்கான அவசியமும் இல்லாததால். மகன் வெளியில் செல்லும் போது மட்டும் ஒரு ஃபோன் கொடுத்துவிடுவோம். அதையும அவன் கவனமாகப் பயன்படுத்த்வான் இதுவரை மூவருமே மிக மிகக் கட்டுப்பாட்டிற்குள் பயன்படுத்துகிறார்கள். பெற்றோர்களாகிய நாங்களும் தான். அதிகம் பயன்படுத்துவதில்லை.

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சரியான வயது உபயோகிப்பின் அர்த்தத்தை உணர்த்தும். அவர்கள் முன் நாமும் முன் உதாரணமாக இருப்பது நல்லது .

      நீக்கு
  4. இந்தியாவில் எப்படியோ ஆனால் இங்கு செல் போன் களால் பயன் அதிகமே அதுவும் ஸ்மார்ட் போன்களால். காரணம் டீச்சர்கள் ஹோம் வொர்க்குகளை செல் போன் மூலம் அனுப்பி விடுகிறார்கள் அதை பார்த்து அன்று என்ன செய்ய வேண்டும சந்தேகங்கள் இருந்தால் சக நண்பர்களுடன் விவாதித்து அவர்களால் ஹோம் வொர்க்குகளை முடித்து விடுகிறார்கள். இங்குள்ள குழந்தைகள் போனில் பேசுவததை விட சாட் அதிகம் செய்கிறார்கள். ஆனால் இப்போது அதுவும் குறைந்துவிட்டது காரணம் அவர்கள் இப்போது பயன்படுத்துவது ஸ்நாப் சாட்தான் அதில் அப்போது அவர்கல் என்ன செய்கிறார்கள் என்பதை போட்டோ எடுத்து ஒரிரு வார்த்தையில் என்ன நிகழ்கிறது என்பதை படம் மூலம் சொல்லிவிடுகிறார்கள். இதில்தான் இங்கு பிரச்சனை சில கட்டுப்பாடு இல்லாத குழந்தைகள்தங்களின் நிர்வாண்பபடங்களை எடுத்து அனுப்பிவிடுகிறார்கள் இப்படி எடுத்து அனுப்பபடும் படங்கள் சில நொடிகளில் மட்டுமே இருக்கும் அதன் பின் அது மறைந்துவிடும்..ஆனால் அந்த ஒரு நொடியை பயன்படுத்தி கொள்ளும் ஆண்கள் அதை ஸ்கீர்ன் சாட் எடுத்து அதை தவறாக பயன்படுத்தியும் விடுகிறாகள்.

    எது எப்படியோ நாம் குழந்தைகளிடம் இரவு சாப்பாட்டின் போது அன்றைய தினம் என்ன நடந்து என்று பேசினாலே பல பிரச்சனைகள் எழாது. இப்படி நாம் பேசும் போது அவர்களுடைய அன்றைய பிரச்சனைகளை அறிந்து நமக்கு தெரிந்த வழ்முறைகளை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்த முடிகிறது அதே நேரத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை திருத்த முடிகிறது


    இப்படி நான் என் குழந்தையிடம் பேசும் போது மாணவ்ர்களிடையே என்ன மாதிரியான் ட்ரெண்ட் இருக்கிறது அவர்கள் என்ன மாதிரியான நவீன appகளை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டு அறிந்து அதை பற்றி நெட்டில் படித்து அதனால் ஏற்படும் நண்மை தீமைகள் என்ன என்பதை அறிந்து அடுத்த தடவை சாஅப்பிடும் போது அதை பற்றி என் குழந்தையிடம் விவாதிப்பேன்

    நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.. நான் என் குழந்தைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறேன் என்பதை அவள் நன் கு அறிவாள் அவள் அறியாதது ஒன்று சுதந்திரம் கொடுத்திருந்தாலும் அவளை அறியாமல் நான் கண்காணிக்கிறேன் என்பதுதான் அப்படி கண்காணிப்பது அவள் தவறு ஏதும் செய்தால் அதை அறிந்து அதை அறியாமல் அதை பற்றி விவாதித்து அவளுக்கு புரிய வைப்பதுதான் இதன் நோக்கம்.. ஆனால் இது வரை அவள் வரம்பு ஏதும் மீறவில்லை என்பது சந்தோஷத்தை தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை மிக பெரிய பின்னுட்டம் இட்டு இடுக்கறீர்கள் மிக அருமையாக நல்லவை பிரச்னை இரண்டையும் சுட்டிகாடடி எல்லாவற்றிக்கும் இரு தரப்பிலும் புரிதல்தான் அவசியமாகிறது அதை கொணர இருதரப்பிலும் பரஸ்பர பேச்சு வார்த்தை அவசியம் சுதந்திரம் என்பது கண்காணிப்பில் இருப்பது நல்லது அருமை
      உங்களுக்கு கொடுக்கும் பதிலில் பாருங்க அரசியல் பேச்சு வார்த்தை போல் விளக்கம் வருகிறது :-):-)

      நீக்கு
  5. ஒவ்வொரு பதிவுல ஒவ்வொரு மாதிரி குழப்பினா என்ன செய்ய?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழம்பின குட்டையில்தான் மீன்பிடிக்கமுடியும் முன்னோர்கள் சொல்லிருக்காங்க ராஜி

      நீக்கு
  6. செல்போன்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு... அதுக்காக செல்போன் கொடுப்பது தப்பெனச் சொல்ல முடியாது, சில கட்டுப்பாடுகளோடு வாங்கிக் கொடுக்கலாம், நைட் பெட் க்குப் போகும்போது போனை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்...

    மற்றும்படி கெட நினைக்கும் பிள்ளை, செல்போன் இருந்தால் மட்டும்தான் கெட்டுப்போவார் எனச் சொல்வதற்கில்லை.... இக்காலத்துப் பிள்ளைகள் அனைத்திலும் உசாராகவே இருக்கிறார்கள்... அவர்களுடைய லிமிட் எதுவென ஓரளவு தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்...

    பிள்ளைகளிடம் செல்போன் இருப்பதால், பெற்றோரின் ரென்சன் குறைந்திருக்கிறது என்பதும் உண்மைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கியமா ஒரு விஷயத்தை சொல்லிருக்கீங்க நைட் பெட்டுக்கு போகும் போது செல்போனை கையில் கண்டிப்பாய் வைத்திருக்க கூடாது இது உடநலத்திற்கும் கேடு ஆமாம் ஆதிரா டென்ஸன்குறைந்து ஏறுகிறது விலைவாசிபோல்

      நீக்கு
  7. /பெறோர்கள் இல்லாமல் பயணிப்பதால் அவர்களின் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் அறிய//

    ஆமாம்ப்பா பூவிழி ..கொஞ்சம் நினைத்து பார்க்கிறேன் பின்னோக்கி நான் கல்லூரியில் படிக்கும்போதும் பின்பு வேலைக்கு போனாப்போவும் சரி லேட்டாச்சுன்னா எங்கம்மா பதறுவாங்க .எப்படி தொடர்பு கொள்ள முடியும் 90 கலீல் வீட்டு தொலைபேசி மட்டுமே இருந்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அந்த கவலையில் இருந்து நமக்கெல்லாம் விலக்கு

      நீக்கு
  8. எங்கள் மகள் படிக்கும் பள்ளியில் செல்போன் நாட் allowed .அதாவது பள்ளியில் உள்ளே பயன்படுத்தினால் confiscate செய்யப்படும் அனால் off செஞ்சிட்டு பள்ளி வெளியே வந்ததும் ஆன் சீய்யலாம் .மேலும் லேட்டாச்சுன்ன இஸ்கூல் ஆபிஸ் ரூமிலிருந்து அவர்கள் எங்களுக்கு சொல்லலாம் ப்ரீ கால்ஸ் .

    செல் போன அத்யாவசியமாகிவிட்டது ஆனால் அதை பயன்படுத்தும் விதத்தில் தான் நன்மை தீமை வெளிப்படுகிறது ..
    நானா இரவு நேரங்களில் மகளிடம் போன் வைக்க அனுமதிப்பதில்லை .தூங்கும்போது நிம்மதியாக தூங்கணும் .
    ஸ்நாப்ச்சாட் வந்தாச்சு ..கொஞ்சம் போன் மற்றும் ஆப்ஸ் பயப்படுத்தினாலும் சில பல நன்மைகள் இல்லாமலில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சலின் நன்மை தீமை 2-ம் இருக்கு அதை நாம் கண்காணித்தால் போதும்

      நீக்கு
    2. என் குழந்தையின் பள்ளியில் இல்லை இல்லை க்ளாஸில் கூட பயன்படுத்த தடையில்லை ஆனால் எல்லோரும் ஸைலண்ட் மோடில் போனை போட்டு வைத்திருப்பார்கள் எமர்ஜன்ஸி என்றால் பதில் அளிப்பார்கள் அப்ப்டி இல்லையென்றால் டெக்ஸ்ட் அனுப்பிவிடுவார்கள் வகுப்பில் செல்போன்பயன்பாடு மிக அதிகம் போர்டில் எழுதுவதை போட்டோ எடுப்பது டீச்சரின் பேச்சை ரிக்கார்ட் செய்வது அவசரத்திற்கு தகவலை ஆன்லைனில் தேடுவது இப்படி பல உபயோகங்கள் பள்ளியிலே ப்ரீ வைபை உண்டு

      நீக்கு
  9. இன்று தான் தங்கள் தளம் வாசித்தேன்.....

    நன்று...அனைத்தும்...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு