புதன், 4 அக்டோபர், 2017

சமூக மாற்றத்தில் இவர்கள்

  சமூக மாற்றத்தில் இவர்கள் 
வேலைக்காரி, வேலைக்காரன் .....
        அதாவது வீட்டில் வந்து வேலை செய்துவிட்டு போகிறவர்கள் இவர்களை இன்றைக்கு  இந்த வார்த்தையை யூஸ்  பண்ண முடியாதுங்க... யூஸ் பண்ண கூடாதுங்க.இங்கத்திய நிலைமை மட்டும் குறிப்பிடுகிறேன்
         யார் இவர்கள் ? வீடுகளில் வந்து  சமையல் செய்த பாத்திரம் கழுவிவிடுவது ,  வீ டு  பெருகி துடைத்துவிட்டு போவது, வீடு வாசல் பெருக்கி தெளித்து கோலம் போடுவது, வீட்டை சுற்றி சுத்தம் செய்வது குப்பையில்லாமல் மேலும் துணி துவைத்து கொடுப்பது. இந்த வேலைகளை செய்ய வருபவர்களை 2000 முன்னாடி வரைக்கும்  கூட வேலைக்காரி வேலைக்காரன் என்று சொல்லி வந்தார்கள்.அன்று வருத்தத்திற்கு  உரியதாக இருக்கும்  கேட்கும் போது ....
         இப்பொழுது அம்மாதிரி எல்லாம் சொல்ல முடியாது. அந்த காலத்தில் இந்த பணியில் இருப்பவர்கள் வந்தால் ஊர் நடப்பு எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் ஏனென்றால் அவ்வளவு விஷயங்கள் கிரகித்து வைத்து இருப்பார்கள். ஒரு நாளில் காலை  மாலை வந்து போவார்கள்.  போகுமிடங்களிலேயெல்லாம் அவர்களை பார்த்தவுடன் கண்டு கொள்ள  முடியும் படி அவர்களின் தோற்ற அமைப்பு இருக்கும். மேலும் வேலை செய்யும்  வீட்டில் சமைக்கும் உணவுகள் வாங்கி கொள்வார்கள். மீந்ததையும் எடுத்து கொள்வார்கள் . மேலும் மேலே சொன்ன எல்லா வேலைகளுக்கும் ஒருவரே வருவார்கள்.
          இப்படியாக போயி கொண்டிருந்த நாட்கள்  இப்பொழுது மாறிவிட்டது ஆச்சரியத்தகும்  முன்னேற்றம்... நவீன மாற்றம் அவர்களுக்குள்ளும்... இன்று ஆபிஸ் போவோர் போல் அவர்களும் மாறிவிட்டார்கள் . நவீன யுகம் அவர்களையும் மாற்றி விட்டது ..சிறுக சிறுக  நடையுடை பேச்சு எல்லாவற்றிலும் மாற்றம். இன்று அவர்களின் தோற்ற அமைப்பு வைத்து வீட்டு வேலை செய்ய போகிறவர்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு மாற்றம்.
       ஓடி நடந்து வேலை செய்ய வந்த  காலங்கள் மலையேறி விட்டது கொஞ்ச நாள் முன்னாடி சைக்கிளில் வந்தார்கள் முக்கியமாய் இதற்க்கு  அரசுக்கு  நன்றி சொல்லணும். இத்து போன இலவசங்களை அள்ளி  கொடுத்து, நன்றி  நவிதலை கொள்ளையடித்து...... தொப்பி தொப்பி என்று சிரித்து... சிறகு அறுத்தெல்லாம் போதாது சிரம் அறுக்க காரியமாக்குகிறார்கள் காரியகாரர்கள் இதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாம் தன் பங்காய் சுகாதர கேட்டை(நாடு நலனுக்குத்தான் ) எப்படி கெடுப்பது என்று தீவிரமான அலோசனையில் .....கடைசி இலவசமாய் தொப்பிதான் கொடுப்பார்களோ ?  தொப்பிக்கு யார் லோகோவா வருவார்கள் ?(ஹேய் பூ ட்ராக்  மாறி போறியே ....பதிவை பாரு... நோ........ இதோ வந்துட்டேன் ......)
        எப்பொழுது பள்ளியில்  இலவச சைக்கிள் வழங்க பட்டதோ ...அதனின் பயனை அடைந்தது இவர்கள் தாம் பின்பு  டிவிஸ் 50, இப்பொழுது ஸ்கூட்டியில்  வருகிறார்கள் ஜம்மென்று. பார்க்க கவுரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது மனதிற்கு, காலம் மாறியது என்று  இருந்தாலும் அவர்கள்  செய்யும் லொள்ளுகளையும் பார்ப்போம்  கொஞ்சம் 
         முன்பு எல்லா வேலைக்கும் சேர்த்து சம்பளம் வாங்கியவர்கள்.. இப்பொழுது பாத்திரத்திற்க்கு  தனி ,பெருக்கி சுத்தம் செய்ய தனி, கோலம் போட தனி, எல்லா எல்லாவற்றிக்கும் தனி தனி ரேட். முக்கியமாய் வேலை செய்யயும் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை கொண்டு சம்பளம் பேசப்படும்.. விருந்தாளிகள் வந்தால் அதுக்கு தனி சார்ஜ். மேலும் ஒரு வேலை மட்டுமே வந்து செய்து கொடுத்து செல்வார்கள் அவர்கள் பயந்த காலம் போயி அவர்களை  கண்டு பயப்படும் காலம் வந்து விட்டது. நான் ரொம்ப ஸ்ரிட் ஸ்ரிட் என்று முறுக்கி கொள்ளும் காலம்.
          படித்தவர்களாகவும் சில பேர், பள்ளி படிப்பு முடித்தவர்களாக சில பேர் அவர்கள் சொல்லும் பொருட்கள் எல்லாம் வாங்கி வைக்க வேண்டும்.   என்ன அட்வைஸமெண்டில் வருகிறதோ அவயெல்லாம் அப்டேட்டில் சொல்லுவார்கள். எவ்வ்ளவு விலையுர்ந்ததாக இருந்தாலும் வாங்கி வைக்க வேண்டும். ஹாண்ட் வாஷ்  கண்டிப்பாய் வேண்டும். மேலும் வீட்டினுள்  எங்கும் அவர்கள் செல்ல அனுமதி கண்டிப்பாய் இருக்கனும். சில பேர் சாப்பிட்ட பாத்திரங்களை வாஷ் பண்ணமாட்டார்கள். வந்தவுடன் பிளாஸ்கில் டீ அல்லது அவர்களே போட்டுக்கொள்ள, செய்து கொள்ள  உரிமை வழங்க பட வேண்டும். டிபனும் சிலருக்கு அடக்கம். வேலைக்கு செல்பவர்கள்  வீடாய்  இருந்தால் அவர்களிடம் ஒரு ஸ்பேர் கீ கொடுக்கப்பட வேண்டும்.  தீபாவளி போனஸ், பொங்கல் போனஸ் ,ஆயுத பூஜை போனஸ், இப்படி பல போன்ஸ்கள் இடையே வரும் சம்பளம் தவிர... முடியாது என்று சொல்லமுடியாது அளவையும்  அவர்கள்தாம் பிக்ஸ் பண்ணுவார்கள். ஐடி, கவர்மெண்ட், ஆஃபிஸ், போன்றவற்றில்  வேலை செய்ப்பவர்கள் கூட இந்த சலுகைகளை போராடித்தான் வாங்க வேண்டும். ஆனால் இவர்கள் நம்மை பயமுறுத்திய வாங்குவார்கள் அப்படினா நின்று விடுவதாக... 
          முன்பெல்லாம்   காலையில் வேளைக்கு வருவார்கள். இப்பொழுதெல்லாம் 9.30 டு 11.30 தான் அவர்கள் நேரம்.... வீட்டின் கோலம் கூட அப்பொழுதான், இல்லாவிட்டால் அதற்க்கு  ஒரு அசிஸ்டன்ட் வைத்திருப்பார்கள். அவர்கள் காலை 7 மணிக்கு மேல் தான்  வருவார்கள் வாசலில் கோலம் போட..  ஏன் ? தவறு என்றெல்லாம் அவர்களிடம் சொல்லிவிட முடியாது வேலைகளை பற்றி அபிப்பிராயம்  உடனே வேளைக்கு ஸ்ட்ரைக் கொடுத்து நம்மை முழி பிதுங்க வைப்பார்கள் காலம் எவ்வளவு மாறி இருக்கிறது என்றால் செல்போனில் மெசேஜ் அனுப்புவார்கள் இன்று வர முடியாது...  என்ன கொடும சரவணா?
          இப்படியாக அவர்கள் வளர்ச்சி ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் கோபம் எரிச்சல் எல்லாவற்றையும்  கொண்டு வருகிறது  இன்று
          என்ன இப்படி சொல்ற பாவம் அவர்கள் என்று சொல்லும் நிலைமையில் யாரும் இல்லை எனக்கு தெரிந்து இப்படித்தான் பார்கிறேன். முன்னேறி கொண்டுதான் வருகிறார்கள், அவர்கள் வேலையில் சம்பளத்தில் என்று அது சந்தோஷமே...... (அந்த பணம் எங்கே போகிறது அது ????)   சரி விடுங்க சமூகத்தில் எவ்வளவோ  மாற்றங்கள்  அதில் சில மாற்றங்கள் கோபம் எரிச்சல் என்பதை தாங்கித்தான் வருகிறது இனி என்ன  இதனை வேலைகளையும் ஆட்கள் வைக்காமல் தாங்களே செய்யும் பாவப்படட ஜென்மங்களை பற்றி மற்றோரு பதிவில் பார்ப்போம்

12 கருத்துகள்:

  1. இதைத்தான் மோடி டிஜிடல் இந்தியா என்றாரோ... ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ நீங்க எப்பவும் கரெக்ட்டா மார்க் பண்ணிடுவீங்க

      நீக்கு
  2. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்... இதை நானும் எதிர்க்கிறேன்... அதாவது எல்லோரும் மனிதர்கள்தானே.. தொழிலை வைத்து அவர்களை அழைப்பது தப்பு.. பெயர் சொல்லி அழைக்க வேண்டும்.. எனக்கும் வேலைக்காரன், வேலைக்காரி என யாரையும் குறிப்பிடுவது பிடிக்காது.

    உலகம் முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது.. அப்போ அவர்கள் மட்டும் முன்னேறக்கூடாதா என்ன?:).. அப்படியேதான் அடிமட்டக் கூலிகளாக இருக்க வேண்டுமோ?..

    இன்னொன்று, இந்த ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆள் பிடிப்பது எதுக்கு... நாமே செய்தால் என்ன?.. வெளிநாடுகளில், கார்டினிங் செய்வதில் இருந்து அனைத்து வேலைகளையும் நாம்தானே சந்தோசமாகச் செய்கிறோம்.. அப்போ அங்கு மட்டும் எதுக்கு ஆள் தேவைப்படுகிறது?

    வோஷிங் மெஷினில் உடுப்பை போட்டு வெளியே எடுக்கக்கூட ... ஆளை இன்னும் காணல்லியே என வெயிட் பண்ணுவோரும் உண்டாமே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு...

    வெளிநாட்டைப் பார்த்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேணும்..

    பயந்திடாதீங்க பூவிழி, நன்றாக எழுதுறீங்க.. ஆனா எனக்கு இதில் உடன்பாடில்லை எனச் சொன்னேன் அவ்வளவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களை போல்தான் வருத்தபடுவேன் ஏன் கோபம் கூட அவர்களை அப்படி கூப்பிட்டாலோ குறிப்பிட்டாலோ கண்டிப்பாய் அவர்கள் முன்னேற்ற பாதையில் நடக்கத்தான் வேண்டும் .ஆனால் போனதை வைத்து அலட்டலும் வருகிறதே இப்பொது நானெல்லாம் 'நம் கையே நமக்கு உதவி கேசு' அக்கம் பக்கம் என் உறவினர் வீடுகளில் நடப்பதை, பார்த்தை பகிர்ந்தேன் ..பயமா எனக்கா அதுவும் நகைசுவைமன்னி அதிராவிடமா கண்டிப்பாய் அவர் அவர் எண்ணங்கள் பகிர்வதற்க்க்கு தானே இந்த பாக்ஸ்

      நீக்கு
  3. இந்த அளவு இல்லாவிட்டாலும் இதில் பாதிக்கும் மேல் அனுபவங்கள் இரண்டு மூன்று வருடங்கள் முன்பே நாங்கள் அனுபவித்தோம். இதே போல என் உறவினர் ஒருவர்சொன்ன அனுபவத்தை வைத்து ஒரு பதிவும் கூட எங்கள் தளத்தில் எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இப்பொழுதைய நிலைமையை பார்த்தேன் நண்பா பக்கத்தில்கூடவே வகையற்ற புலம்பலையும்

      நீக்கு
  4. விசேஷங்களுக்கு சமையல் செய்யும் பெண்மணி நீங்கள் சொல்வது போல ஸ்கூட்டியில் வந்து போனார். இவர்களை அமர்த்த ஒரு ஏஜென்ட் அமைப்பு உண்டு. அவர்கள் சம்பளம் பேசுவார்கள். இவர் எங்களிடம் தனது வேலைக்கான ஊதியம் பெறும்போது "அவர்கள் கமிஷன் போக எனக்கு கம்மியாகத்தான் வரும். கொஞ்சம் காசு போட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் ஒரு கலை ,நல்ல திருப்தி இருந்தால் நாமே மிக சந்தோஷமாய் அள்ளி வழங்கிவிடுவோம்

      நீக்கு
  5. முன்பு நான் வேலை தரவில்லையென்றால் நீ பிச்சைதான் எடுக்கனும் என்ற நினைப்பில் வேலைக்காரர்களை அடிமை போல பாவித்து வந்தார்கள்.. ஆனால் கால சுழற்சியில் வேலைக்காரர்களுக்கு தேவை அதிகரித்ததால் அவர்கள் இப்படி டிமாண்ட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் அவ்வளவுதான் அவர்களுக்கான ரைட்டை கொடூப்பத்தில்தான் நமக்கு கஷ்டம் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் நீங்க சொல்வது ரைட்டு ரைட்டுக்குள்ள அடங்கும் போது அநேகமா யாரும் கஷ்டம நினைக்கமாட்டாங்கனு நினைக்கிறேன்

      நீக்கு
  6. இந்த பதிவை படித்த பின் பேசாமல் இந்தியாவிற்கு ஒரு விசா போட்டு அங்கு வந்து வேலை பார்க்கலாம் போல தோணுது...ஹும்ம்ம்ம்ம் இப்படியெல்லாம் பதிவு போட்டு மதுரைத்தமிழனை இந்தியாவீற்கு அழைக்க ஒரு சதித்திட்டம் மோடியின் தலைமையில் தீட்டப்பட்டுள்ள்தோ என சந்தேகம் வருகிறது எத்ர்கு ஜாக்கிரையாக இருக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நானும் அப்பப்ப என் வீட்டில் மிரட்டுவேன்

      நீக்கு