ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே


இப்படி தான் இன்று  நிலைமை இருக்கிறது ...பெற்றோரை கூட பாரமாய் நினைக்கும் காலம் அவசரம் அவசரம் நேரம் ஒதுக்க முடியாமல் ஆனால் இப்படி பட்ட உலகில் பிரதி பலன் பாராமல் உதவி புரிவர்களும் இருக்கிறார்கள்.  அதை பற்றி பகிர்ந்து நாமும் வியக்கிறோம் எங்கள் பிளாக்கில் வெள்ளி தோறும் அதை பற்றிய குறிப்புகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள் .மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறார்கள் .இப்படி பிரதி பலன்  பாராமல் உதவும் தோழமைகள் இங்கு ஏராளம் என்று கேள்வி பட்டுளேன் .

இங்கே ஏன் திடீரென இதை பற்றி பேசுகிறேன் என்று நினைப்பீர்கள்  அப்படி எனக்கும் நான் இந்த பிளாக் என்று ஒன்று ஆரம்பித்த நாள்  2012 முதல்  வந்து ஊக்கம் அளித்த தோழமைகள்  அதிகம் நடுவே இதை தொடராமல் விட்டு விட்டேன் 2013 லேயே அப்பொழுது இருந்த பிரபல வலைப்பதிவாளார்கள்


திரு.வை.கோபாலகிஷ்ணன் ஐயா (இவரை பற்றி எதுவும் இப்பொழுது தெரியவில்லை மிகவும் வருத்தம்)

திரு திண்டுக்கல் தனபாலன்

திரு அவர்கள் உண்மைகள்

திரு கோமதி அரசு

திரு நாஞ்சல் மனோ

திரு பாலகணேஷ்

திரு தமிழ்வாசி

திரு அரசன்

திரு உஷா அன்பரசு

திரு இளமதி

திரு அம்பாள்திரு முரளிதரன் 

திரு ராஜலக்ஷ்மி பரமசிவம்

திரு யாதவன் நம்பி

திரு வெங்கட் நாகராஜ்

திரு ஸ்கூல் பையன்

திரு கணையாழி கண்ணதாசன்

திரு கிரேஸ்

திரு மகேந்திரன், திரு வருண் ,திரு கலியபெருமாள் புதுச்சேரி....... என்று பலர் என் பிளாக்கையும்   பார்வையிட்டு கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சில பெயர்கள் விட்டு பட்டு இருக்கலாம் அவர்கள் மன்னிக்கவும் ....அவர்களில்  பலரை இந்த 2017 அதிகம் பார்க்க முடியவில்லை சில பேரை தவிர அவர்களின் பதிவுகளும் அதிகம்  வருவதில்லை அவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நான் ஆரம்பித்த வேகத்தில் சீக்கிரம் விடுமுறையும் கொடுத்துவிட்டேன் என் பிளாக்கு மிகவும் வருத்தம் இப்பொழுது வருகிறது இவர்களையெல்லாம் ரொம்பவும் மிஸ் செய்துவிட்டேனே என்று....

 

மறுபடியும் நான் 2017 பிளாக்கை நீண்ட  இடைவெளிக்கு பிறகு ....இடைவெளியா வருடங்கள் என்று சொல்லனும்  சகோ  திரு திண்டுக்கல் தனபாலன்  'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற பதிவை படித்தேன். என்னை போன்றொருகாவே எழுத பட்டிருக்கும் பதிவு அதை படித்தவுடன் திரும்பவும் ஒரு புத்துணர்வு மீண்டும் வலைப்பதிவுக்குள் என்னை நுழைத்து கொண்டேன் இப்பொழுதும் நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும் எனக்கு தோழமை கரம் நீட்டி  உற்சாகம் கொடுப்பவர்கள் அன்று  ஊக்கமளித்த பலர் இன்றும் வருகை புரிந்து ஊக்கமளிக்கிறார்கள் அவர்களில் அன்றும்  இன்றும் வருபவர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. DD சகோ, Avargal Unmaigal-நல்ல நண்பர் என் பெயரைதமிழில் எழுதிய பேனரை அளித்தவர் அன்றே பிரதிபலன் பாராமல் அதை கூட போட தெரியாமல் இருந்திருக்கிறேன்  ,சிஸ் கோமதி அரசு, தனிமரம்   இன்று வலைப்பதிவாளர்கள் ஊக்கம் பெரும் இடமாக இருக்கும் எங்கள் Blog என்னும் தளம் நான் அனுப்பிய கதையையும் போட்டு மகிழ்ச்சியை  கொடுத்தவர்கள் இங்கு பல வலைபதிவாளர்களை  புதிதாய்  அறிமுக படுத்தி கொண்டேன்......., தோழமைகள் பலர் அதில்  ரசிக்கவைக்கும் பதிவுகளை அள்ளித்தரும் கில்லர் ஜீ  , 24 மணி நேரத்திற்குள் 2 பதிவுகளை வெளியிடும் ராஜி  ,நகைசுவை மன்னி அதிரா (தேமஸ் நதியின் அன்அவிஷியல் ஓனர்) ,அவரை அந்த இருப்பிலேயே வைத்திருக்கும்அருமை தோழி  ஏஞ்சலின் ,எல்லோரையும் ஊக்கப்படுத்தும் துளசிதரன், கீதா ,அமைதியாக வந்து போகும் மொஹமத் ,சிஸ்  வல்லிசிம்ஹன்,  நெல்லை தமிழன், ஜீவி சார்,  நண்பர் ஏகாந்தன்,தொடருங்கள் என்று ஊக்கமளிக்கும் வருகை புரிந்திருக்கும் நண்பர் ஜீவாலிங்கம்  மற்றும் அனுராதா பிரேம்குமார்   இது போல்  இன்னும் பலர் வலைச்சரத்தில்   என் ஆன்லைன் தோழமைகள்   ராணிமா ,சிந்து ,ஜாஸ்  நல்ல எழுதவீர்கள் என்ற ஊக்கத்தை கொடுத்தவர்கள் என் நலனில் அக்கறை கொண்டவர்கள். 



நான்  பிளாக் என்ற வலைநுட்பத்தை பற்றி  சிறுக சிறுக அறிந்து வந்து கொண்டு இருக்கும் போதே கன்னிமுயற்சியிலேயே  அதிலிருந்து விலகி நின்றதால் இன்று மீண்டும் பிளாக்கில் நுழைந்தவுடன் ஒன்று புரியவில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ......கையிருப்பில் பழையது இருந்ததை  போட்டுவிட்டு முழித்து கொண்டு இருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல ஒன்று ஒன்றாய் மீண்டும் பிளாக் என்பதை பற்றி படிக்கச் ஆரம்பித்தென் நான் ஆரம்பிக்கும் போது .com இருந்த பிளாக் பின்னர் கூகுள் .in என்று மாற்றி இருக்கிறது கில்லர்ஜி யால்  தமிழ்மணம் என்ற திரட்டி ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வியால் இதையே அறிந்தேன் ...தமிழ்மணம் என்ற திரட்டியை கொடுத்திருப்பதையெல்லாம் மறந்துவிட்டேன் ...இப்போ தோழமைகள் சிலர் 'அடிப்பாவி' என்றும் சிலர்' ம்கூம் கிழிஞ்சு போ லச்சனம்' என்று மனசுக்குள் சொல்வீர்கள்.... என்னது?? இதுவேறயா பிளாக்லேயே திட்டுறோம் இரு  என்று நினைத்தாலும் வாங்கி கொள்கிறேன் truth பிளாக்கு போயி வந்தற்கு  அடையாளமாய்  அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று நானும் சொல்லிவிடலாம் என்று நம்பிகை இன்று திரும்பவும் விவரங்களை நான் தேடும் போது பார்கிறேன் சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களும் அதை  பற்றி விளக்களுடன் சொல்லி கொடுத்து இருக்கிறார்.அவர் சொல்லியிருந்தவை என் பிளாக்கில் எடுக்கவில்லை எரர் என்றே காண்பித்தது அவரிடம் கேட்டேன் ஒன்று புரியவில்லை என்று

இப்பொழுது நீயெதுவும் குழம்ப வேண்டாம் என்று பிரதிபலன் பாராமல் உதவி புரிந்தவர் சகோ திண்டுக்கல் தனபாலன் ஆச்சிரியமாய் இருக்கிறது இவர்களை  போன்றவர்களை பார்க்கும் பொழுது சந்தோஷமாய்  இருக்கிறது .....நம்பிக்கையும் வருகிறது .....என்னால் இனியும் என்னுள் தோன்றுவதை பிடித்ததை உபோயோகமாய்  தோன்றியவற்றை பதிக்க  முடியும் தமிழ் மொழியில்.....மனதுக்கு திருப்தியாய் நம் எழுத்தை நாம் பார்க்க அடுத்தவர் முன் வைக்கும் போது ....அந்த அடுத்தவர்கள் பார்வைக்கும், பழக்கத்திற்கும் வெளியே நிற்பவர்கள்..... நட்பாய்  கிடைத்து நம் எழுத்தை அவர்கள்  ரசிக்கும்  போது வரும் ஆனந்தமிருகே வார்த்தையில் சொல்லமுடியாது..... என்ன பெரிசா எழுதிட்ட.... அப்படி தெரியும் இருந்தாலும் மனதில் வரும் உவகை மேலும் மேலும் கிறுக்க சொல்லி தூண்டுகிறது.  நாட்கள்  வீணடித்து விட்டோமே  நினைகிறேன் இப்போது  என்ன   பெரிய மனத்துவளல்,அதனால் எழுந்த  சோம்பல்   இங்கேயே இருந்திருந்தால் ஆறுதல்  கொடுக்க தோழமைகள்  இருந்திருப்பார்களே இன்னும் உற்ச்சாகமாய் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.....


இவரை போன்றவர்கள் இருத்தால்வலைத்தளத்தை பற்றி A டு Z  அறியாத  என்னை போல் இருக்கும் கத்துக்குட்டிகள் பிழைத்து கொள்வார்கள்.இவருடைய பின்னுட்டத்தை அநேகமாய் எல்லா வலைச்சரத்தில் பார்க்கமுடியும் ஊக்கம்  கொடுப்பதில் வள்ளல் என்று பலர் நினைத்திருப்பீர்கள்   எனக்கு இவர் உதவியது போல் பலர் பலருக்கு(புதிய பதிவாளருக்கு)  இங்கு  உதவியிருப்பார்கள் ......


நீங்க நல்லாயிருக்கோணும்  தமிழ் வலையுலகம் முன்னேறதமிழ் வலையில் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் முன்னேறஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே

 

என் பதிவுகளை பார்வையிட்டு தனது   கருத்தை  சொல்லி செல்லும்  வலைச்சர தோழமைகள் அனைவருக்கும்  நன்றி...... பார்வையிட்டு செல்வோர்க்கும்  நன்றி ..... என் பதிவை படித்து நிறை குறைகளை கூறி ஊக்கமளித்து வழி நடத்த  கேட்டு கொள்கிறேன்.

நேற்று என் பதிவில் 2 கீதா சிஸ் வருவதில் ஒன்னு மிஸ் ஆகிவிட்டது அவர் கீதாசாம்பசிவம் உங்களை விட்டுவிட்டேனே என்று நினைக்காதீர்கள் சிஸ் இன்று சேர்த்துவிட்டேன் 


24 கருத்துகள்:

  1. மனதில் பட்டதை யதார்த்தமாக எழுதியது அருமை இக்கூட்டத்தில் கத்துக்குட்டி என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    எனது பெயரை கில்லர்ஜி என்று குறிப்பிடவும் இல்லையெனில் தெய்வகுற்றமாகி விடும்.

    தொடர்ந்து தயங்காமல் எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் அப்படியே தூக்கலாய் கூப்பிடலாம் என்று தான் வெறும் ஜி மொக்கையா இருக்கே நன்றி உங்களையெல்லாம் கூட நான் மிஸ் செய்து இருக்கிறேன் அப்போது

      நீக்கு
    2. கில்லர்ஜீ இதைத்தான் தெய்வகுற்றம் எனறேன்

      நீக்கு
  2. அன்பான அருமையான பதிவு.
    மனதில் உள்ளதை அப்படியே கூறும் பதிவு.
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என்றும் உதவும் மனம் படைத்தவர். வேலை நிமித்தமாய் சில நாட்கள் வரவில்லை பதிவுகளுக்கு . அவர் வந்து விட்டால் எல்லோர் பதிவுகளுக்கும் போய் ஊக்கம் தரும் பின்னூட்டங்களை அளிக்கத் தவறமாட்டார். இணைய சிக்கலைத் தீர்த்து வைப்பதில் வல்லவர்.

    எங்கள் Blog ஆசிரியர் குழு இடையில் பதிவுலகத்தில் ஏற்பட்ட தொய்வைப் போக்கிப் பதிவர்களை வாரம் முழுவதும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்து விட்டார்கள்.

    வலைச்சரம் முன்பு செய்த பணியை எங்கள் Blog எடுத்து கொண்டது போல் உள்ளது.

    தொடர்ந்து எழுதி வாருங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
    வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள்.

    அனைத்து அன்பர்களும் ஊக்கம் தருவதால் தான் நானும் வலை உலகத்தில் இருக்கிறேன்.




    பதிலளிநீக்கு
  3. எங்கள் பிளாக்கில் சனிக்கிழமை பாஸிடிவ் செய்தி நல்லோரை அறிமுகப்படுத்தும் நாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழமையை தவறாக சொல்லிவிட்டேனா நன்றி சிஸ் வருகைக்கும்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நானும் இதை சொல்ல நினைத்தேன்:).. நமக்கு கடமை முக்கியமெல்லோ:).

      நீக்கு
  4. தனபாலன் சொந்த தொழிலில் முழுவதுமாக இறங்கிருக்காவிட்டால் பதிவுலகம் இன்னும் பலமாக செயல்பட்டு இருக்கும்.புதிதாக வருபவர்களுக்கு அவர் உதவி மிகவும் தேவை என்பது உண்மை...ஆனால் இன்று அவரிடம் உதவி கேட்டால் உடனடியாக செய்யாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்து தருவார்... அவருக்கு என்றும் என் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. லஷ்மி அம்மா என்று ஒரு வயதான அம்மா அருமையாக பதிவு எழுதிக் கொண்டிருந்தார்கள் அவர்களை காணவே இல்லை....அவருக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று மனதில் ஒரு ஐயம் ஏற்படுகிறது அப்படி ஏற்பட்ட போதிலும் அவருக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று பல நேரங்களில் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை நன்றி பிராத்திப்போம்

      நீக்கு
    2. ஆம் மதுரை... புனேவிலிருந்து எழுதுவார். நானும் அவரை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். அவர், தமிழ் உதயம்...

      நீக்கு
    3. ஆவ்வ்வ்வ் அந்த லஸ்மி அம்மாவை நானும் போஸ்ட்டில் கேட்டுக்கூடத் தேடினேன் அது இப்போ 5,6 வருடங்களாகியிருக்கும்.. திடீரெனக் காணவில்லை அவவை:(

      நீக்கு
    4. சாந்தியிடம்(அமைதிசாரலிடம்) கேட்டேன் லக்ஷ்மி அம்மாவை நலமுடன் தன் குடும்பத்தினருடன் இருப்பதாய் சொன்னார்கள்.

      நீக்கு
  6. அனைவரையும் நினைவுகூர்ந்து சொல்லியிருப்பது அருமை ..2012 ளையும் நீங்க பூவிழியா தான் இருந்திங்களா :) அப்போ எங்க கண்ல படாம எப்படி தப்பிச்சீங்க :)
    எங்கள் பிளாக்தான் fb ஏ கதின்னு இருந்த என்னை வலைப்பதிவு பக்கம் திரும்ப வைச்சாங்க :)
    எனக்கும் தமிழ் பேனர் போட்டுக்கொடுத்தது மதுரை தமிழன்தான் :) நீங்க குறிப்பிட்டுள்ள எல்லாருமே தொடர்ந்து அனைவரையும் ஊக்குவிப்பவர்கள் .
    தொடர்ந்து எழுதுங்க பூவிழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அஞ்சு நானும் உங்களையெல்லாம் எப்படி மிஸ் பண்ணேன் தெரியலை அப்போ

      நீக்கு
  7. இங்கு எங்களையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. தமிழ்மணம் வாக்குப்பட்டை பார்த்ததும் சந்தோஷம் வந்தது. வாக்களித்துவிட்டேன். கோமதி அரசி மேடம் சொல்லியிருப்பது போல எங்கள் நேர்மறைச் செய்திகள் வெளியாகும் நாள் சனிக்கிழமை.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. சொல்வதற்கெதுவுமில்லை.. நீங்களே எல்லாம் சொல்லிட்டீங்க... நானும் புளொக்கும் வாணாம் எதுவும் வாணாம் என 2 வருடமாக இருந்தேன் .. அஞ்சுதான்.. எனக்கு சொக்கலேட் அல்வா எல்லாம் தந்து மிரட்டி வெருட்டிக் கூட்டிவந்தா:)

    தொடர்ந்து எழுதுங்கோ... புளொக் வாழ்க்கையில் பலர் வருவார்கள் போவார்கள்.. ஒரு ரயில் பயணம் மாதிரி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமையான ரயில் பயணமாய் இருக்கிறது .வருகைக்கு நன்றி அதிரா

      நீக்கு
  9. இன்னிக்குக் க்ளிக் செய்ததுமே உங்களோட வலைப்பக்கம் திறந்து விட்டது. முதல் வருகை. நீங்க முன்னால் எழுதினதெல்லாம் இனிமேல் ஒவ்வொண்ணாப் படிக்கணும். அவர்கள் உண்மைகள் சொல்லி இருக்கும் லக்ஷ்மி அம்மா எனக்கும் சிநேகிதி தான். கடைசியா 2013 பதிவர் விழாவில் கலந்து கொண்டு ஃபோட்டோ போட்டிருந்தாங்க. இப்போச் சில வருஷங்களாக எழுதுவதில்லை. நீங்க குறிப்பிட்டிருக்கும் வலைப்பதிவர்கள் அனைவருமே தெரிந்தவர்கள் தான் என்றாலும் நேரப் பற்றாக்குறையால் எல்லோருடைய பதிவுகளுக்கும் அதிகம் போக முடியலை. வைகோ சார் இப்போ எழுதுவதில்லை என்றாலும் அவ்வப்போது பின்னூட்டங்களை வெளியிடுகிறார். தொடர்ந்து எழுதுங்கள். முன்னால் எழுதினப்போவும் பூவிழி என்னும் பெயரிலே தான் எழுதினீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிஸ் இந்த பெயரில் தான் எனக்கும் நேரம் பற்ற குறை தான் இதில் இருந்து விலக்கியதற்கு காரணம் முன்பு நன்றி வருகைக்கு

      நீக்கு