திங்கள், 28 ஜனவரி, 2013

அம்மாவின் பெருமுச்சு


இன்று ஒரு தகவல் 
நான் உன் அம்மா 
என்ற அறிவிப்பு பலகை 
உணவு மேசையில் 
முன்று வேளையும் 
நன்றி என்ற சொல்லை
எப்பொழுது எழுதுவது 
இன்று ஒரு தகவலில் 

ஏன் பெற்றாய் ?
என்ற கேள்விக்கு 
விடை தேடியபோது 
அது வெய்டிங் லிஸ்டில் ...........
பரலோகம் போன 
என் ஏழாம் தலைமுறையை 
காணவில்லை .......
பதில் அளிக்க 
தொடரும் ...........

தாறுமாறாய் சிந்திகிறாய் 
உன் சிந்தனைக்கு 
கடிவாளமிடும் அவசரத்தில் .....
விழுந்துவிட்டேன் 
உன் கோபகுளத்தில் 
தகிகின்றன என் மனம் 
தாங்கவொன்னா 
உன் சுடும் மூச்சில் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக