திங்கள், 7 ஜனவரி, 2013

இரத்த கொதிப்பு


உணவில் உப்பை குறைத்து கொண்டால் இரத்த கொதிப்பு கட்டுப்படுமா?


உணவில் உப்பை குறைத்து  கொண்டால் மட்டும் போதும் இரத்த கொதிப்பு நோய் கட்டுப்பட்டுவிடும் என்று சொல்வது சரியா?

சரியில்லை .
உணவில் உப்பை குறைத்து கொள்வதால் மட்டும் இரத்த கொதிப்பை முழுவதுமாக கட்டுபடுத்திவிட முடியாது .உப்புக்கும் இரத்த கொதிப்புக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான் .

உப்பில் சோடியம்,குளோரைட் என்னும் இருவகை தாதுகள் உள்ளன.இவற்றில் சோடியம் தாதுக்கு உடம்பில் நீரை தேக்கி வைக்கும் குணம் உண்டு .

நம் சிறுநீரகங்களுக்கு சிறுநீரை சுரக்கும் பனி தவிர உடம்பில் திரவ நிலையை சமச் சீராக வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பணியும் உண்டு ஆகவே ,உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் அதிலுள்ள  சோடியம் உடம்பில் தண்ணீரைத்  தேக்கி வைத்து சிறுநீரகங்களுக்கு அதிக  வேலைப்பளுவைத் தந்துவிடும் இதனால் இரத்த கொதிப்பு அதிகரித்துவிடும் .

மேலும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்கனவே சிறிதளவு சிறுநீரகங்கள் பாதித்திருக்கும் அத்துடன் உப்பையும் அதிகமாக சேர்த்து  கொண்டால் அவர்களுக்கு சீக்கிரத்தில் சிறுநீரகங்கள் செயலிழந்து போக வாய்ப்புள்ளது

இதை தவிர்க்கவே இரத்த கொதிப்புள்ளவர்கள் உப்பை குறைத்து கொள்ள

வேண்டும், என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உப்பை குறைப்பதனாலேயே

இரத்த கொதிப்பு நின்று விடாது, அதனுடன்  மன உளைச்சல் கூடாது,

எண்ணெய் மிகுந்த கொழுப்பு உணவுகளை குறைத்து கொளவேண்டும்.

 . புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் தவிர்க்கவேண்டும் 

2 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
    08.01.2013 வலைச்சரம் மூலம் என் வருகை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்>

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மலர் பாலன் = தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு