புதன், 2 ஜனவரி, 2013

சிவப்புநிற காய்கறிகள் ...


சிவப்புநிற காய்கறிகள் இரத்தவிருத்தி செய்யுமா ?இரத்தம் போல் சிவப்பாக உள்ள பீட்ருட் போன்ற காய்கறிகள் இரத்த அபிவிருத்திக்கு அவசியம் என்பது உண்மையா?சொல்வது சரியா ?

உண்மையில்லை .

நம் இரத்தத்தின் நிறமும் பீட்ரூட்டின் நிறமும் ஒரே நிறம் என்பதால்
பீட்ரூட் சாப்பிட்டால் இரத்தம் உற்பத்தியாகிவிடும் என்ற தவறான நம்பிகை மக்களிடத்தில் நிரந்தரமாகி விட்டது .

நம் ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஹீம் என்னும் இரும்பு பொருள் இரத்த அணுக்களில் இருபதுதான் இதே போல் பீட்ரூட் சிவப்பாக இருப்பதற்கு பீட்டா கரோட்டீன்(Beta-Carotene) என்னும் நிறமி பொருள் காரணமாகிறது

ஹீம் வேறு ,பீட்டா கரோட்டீன் வேறு
நமக்கு இரத்தம் உற்பத்தி ஆவதற்கு ஹீம் அவசியம் ஹீம் உற்பத்தியாவதற்கு இரும்புச் சத்து  அவசியம் .இரும்பு சத்து சிவப்பு நிறகாய்கறிகளைவிட பச்சை நிற காய்கறிகளிடம் தான் மிக அதிக அளவில் உள்ளது .

இரும்பு சத்து அதிகம் உள்ள காய்கறிகள் –
காலிப்பிளவர் ,முட்டைகோஸ், பீர்க்கங்காய் ,புடலங்காய் பூசினிகாய், வெண்டைகாய், அவரைகாய், கொத்தமல்லி, முருங்கைகீரை, அகத்திகீரை ,பசலைகீரை, போன்ற காய்களில் அதிகம்

இந்த காய்களை தினமும் உணவில்  சேர்த்து கொண்டால் இரத்தம் நன்கு உற்பத்தியாகும் .

இந்த காய்களோடு ஒப்பிட்டால் பீட்ரூட்டில் உள்ள இரும்பு சத்து குறைவு தான் அதை மட்டும் சாப்பிடால் ரத்தம் உற்பத்தியாகாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக