திங்கள், 21 ஜனவரி, 2013

ஸ்கிப்பிங் Vsஉயரம்


‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?

ஆமாங்க இந்த உயரம் எல்லாதிற்கும்  எல்லாருக்கும் வேணும் தான் உலகமே ஆளா பறக்குது .

ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா ?

உண்மையில்லை.

ஒருவருடைய உடல் உயரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவருடைய மரபணுக்கள் (Genes)தான் அதாங்க .ஜீன் ஜீன் -ங்க (ஜின் இல்ல போட்டுகிற ஜீனும் இல்ல ஒன்னு வயிருகுள் போடறது ஒன்னு காலில் போடுறது )

அம்மா,அப்பா ,தாத்தா ,பாட்டி, ஆகியோரின் உடல் உயரத்தைப் பொறுத்துதான் உயரம் அமையும்
 (அதுசரி அதுக்குன்னு ஷ்ரேயா போல பொண்ணையும் அசின்போல பொண்ணையும் பார்க்கம இருக்கமுடியுதா ) .உடலில் சுரக்கும் வளர்ச்சி இயங்குநீர் உயரவளர உதவுகிறது .

அவரவர் சாப்பிடும் உணவுகள், உடற்பயிற்சிகள்    நோய் வராமல்  உடல்நலனைக் காக்கும் முறைகள் ஆகியவற்றை பொருத்தும் உயரம் அமையும் . 18 வயதிற்க்குப் பிறகு உடலின் உயரம் வளராது .அதன்பின்பு எந்தவொரு சக்தியினாலும் உயரத்தை அதிகரிக்க முடியாது(இது என்னாங்க காலில் இரண்டு அடிக்கு மேல இருக்கற காலணியை போட்டுகிட்டா போச்சி)

  எனவே ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு தவறு என்றாலும், இது ஒரு ஏரோபிக் பயிற்சி ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடலின் வளர்ச்சியை தூண்டுகிறது மேலும் இந்த பயிற்ச்சியின் போது கை,கால்,மார்பு,வயிறு,தொடை போன்றவற்றின் தசைகள் இயங்குகின்றன .இதனால் அவை இரத்தத்திலிருந்து அதிக அளவு பிராணவாயுவை பெற்று கொண்டு அங்கு சேர்ந்துள்ள கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றி விடுகின்றன. இதனால் உறுப்புகள் சுறுசுறுப்பு அடைகின்றன .
மேலும் உடல் இடையையும் , உடல் எடையை குறைக்கவும் (முக்கால் வாசி எடையே இடையில்தான் )இப்பயிற்சி உதவுகிறது .(அப்படினா இது ரொம்ப முக்கியமான விஷயம்தாங்க) 

2 கருத்துகள்:  1. ஸ்கிப்பிங் கயிறு ஆடாவிட்டால் தொப்பையின் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது சரிதானே ?

    பதிலளிநீக்கு


  2. ஸ்கிப்பிங் கயிறு ஆடாவிட்டால் தொப்பையின் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது சரிதானே ?

    பதிலளிநீக்கு