ஞாயிறு, 13 ஜனவரி, 2013

உலகத்தின் கடைசிநாள் !லகத்தின் கடைசிநாள் !      
சலசலப்புக்கு 
ஓர் முற்றுபுள்ளி
மாயமாய் போனதே 
மாயனின் மதிப்பீடு 

கிறிஸ் மஸ் தாத்தாவின்
மணியோசையும் வந்து போனதே 
"13"ன் கரகோஷம் 
கரையை கடந்ததே  
.
இன்று புதிதாய் பிறந்தோமோ 
கண்பட்டு விட்டதே !!!!!
இந்த பூமிகிரகதிற்கு 
சுத்தி போட்டுவிடுவோம் 
நம் சந்தோஷ கூக்குரலால் ......

'பொங்கலோ பொங்கல் '
வான் எட்டட்டும் ,முட்டடும் 
கிரகங்களுக்கு வாழ்த்து  
சொல்லட்டும்
கரும்பின் இனிமை 
கயிலாயத்தை எட்டுதே 
'தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா'!!
என்ற பொன்மொழியை 
உணர்ந்திடுவோம் ,உணர்த்திடுவோம் .
   
தொடரட்டும் ..........
இந்த வையகம் உள்ளவரை 
தமிழின் புகழ் 
தமிழரின் புகழ் 
இது
தமிழ்   திருநாளின் 
உறுதிமொழியாகட்டும்.

முறைதவறிய முறைகேடுகள் 
முறிந்து போகட்டும் 
பொங்கி எழுவோம் புயலாய்
களைந்திடுவோம் கசடுகளை 
கைகொள்வோம் நல்லொழுக்கத்தை 
வந்ததே இனிய நாள்!
தருமே  இனிய வாழ்க்கை  !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக